விளையாட்டு

ஆஸ்திரேலிய பொது பூப்பந்து போட்டி; இரண்டாம் சுற்றில் மலேசியா

19/11/2025 05:09 PM

சிட்னி , 19 நவம்பர் (பெர்னாமா) -- 2025 ஆஸ்திரேலிய பொது பூப்பந்து போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு இன்று மலேசியாவின் இரு ஜோடிகள் முன்னேறியுள்ளன.

கணித்தது போலவே, கலப்பு இரட்டையரான சென் தாங் ஜீ-தோ ஈ வேய் ஜோடி சக நாட்டவர்களான வோங் தியேன் சி-லிம் ச்சீயூ சியேன் இணையை வீழ்த்தியது.

சிட்னி ஒலிம்பிக் அரங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில், உலகத் தர வரிசையில் நான்காம் இடத்தில் உள்ள சென் தாங் ஜீ-தோ ஈ வேய் ஜோடி 21-19, 21-9 எனும் நேரடி செட்களில் தங்களின் வெற்றியை உறுதி செய்தது.

நாளைய ஆட்டத்தில் அவர்கள் தைவானுடன் மோதவுள்ளனர்.

அதேபோல, ஆடவர் இரட்டையர் பிரிவில் வான் அரிப் வான் ஜுனாய்டி-யாப் ரோய் கிங், 22 நிமிடங்களில் 21-8, 21-11 என்று நேரடி செட்களில் உபசரணை நாட்டினரை வீழ்த்தினர்.

இரண்டாம் சுற்றில் அந்த ஜோடி நாளை மலேசியா - கொரியாவின் கோ-வி ஷெம்-ச்சோய் சோய் க்யூ இணையரைச் சந்திக்கின்றனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)