குராக்கோ , 19 நவம்பர் (பெர்னாமா) -- 2026 உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதிப் பெற்று, உலக காற்பந்து வரலாற்றில்
மிகச் சிறிய நாடான குராக்கோ ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை நடைபெற்ற, ஜமைக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சமன் கண்டதை அடுத்து, கெரிபியன் தீவு நாடான குராக்கோக்கு இந்த வெற்றி கிடைத்தது.
H குழுவின் போட்டியாளர்களான குராக்கோவும் ஜமைக்காவும் தகுதி சுற்றின் இறுதி ஆட்டத்தில் களம் கண்டன.
அதில், கோல் அடிக்க முடியாமல் இரு அணிகளும் ஆட்டத்தை சமநிலையில் முடித்ததால் தலா ஒரு புள்ளியைப் பெற்றன.
இந்த முடிவின் வழி, ஜமைக்காவை விட குராக்கோவும் ஒரு புள்ளி முன்னிலையில் முதலிடம் பிடித்து உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)