ஜாவா மாகாணம், 20 நவம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்று செமெரு எரிமலை வெடித்ததில் அங்குள்ள கிராமப்பகுதியும் நகரமும் pyroclstic சேறு மற்றும் சாம்பலால் மூடப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் பெரும் சேதத்தையும் இழப்புகளையும் சந்திக்க நேரிட்டுள்ளது.
இந்த எரிமலை வெடிப்பினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான Kamar A கிராமத்தில் சாலைகள் சேதமடைந்திருப்பதை அங்குள்ள நகராட்சி அலுவலகம் வெளியிட்ட காணொளியில் காண முடிந்தது.
இந்தோனேசியாவின் உயரமான மலைகளில் ஒன்றான செமெரு எரிமலை நேற்று வெடித்ததைத் தொடர்ந்து அது அதிகமான சாம்பலையும் புகையையும் வெளியேற்றி வருகிறது.
அதேவேளையில் அதிலிருந்து வெடித்து சிதறி வெளியேறிய கற்கள் சில நூறு மீட்டர்களுக்குள் பறந்து செல்வதால் அங்கு உயர்நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு மலை இந்தோனேசியாவில் விழிப்பு நிலையில் உள்ள சுமார் 130 எரிமலைகளில் ஒன்றாகும்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)