விளையாட்டு

ஆஸ்திரேலிய பொது பூப்பந்து; அரையிறுதிக்கு முன்னேறியது மலேசியா

21/11/2025 06:30 PM

ஆஸ்திரேலிய , 21 நவம்பர் (பெர்னாமா) -- 2025 ஆஸ்திரேலிய பொது பூப்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு மலேசியா முன்னேறியுள்ளது.

உலக கலப்பு இரட்டையரான சென் டாங் ஜே ஐஇ-டு ஹியோ வெய் ஜோடி தைவானின் யே ஹாங் வெய் - நிக்கோல் கோன்சலேஸ் சான் இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதிப் பெற்றது.

சிட்னி ஒலிம்பிக் அரங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில், உலகத் தர வரிசையில் நான்காம் இடத்தில் உள்ள சென் டாங் ஜே ஐஇ-டு ஹியோ வெய் ஜோடி...

தைவானின் யே ஹாங் வெய் - நிக்கோல் கோன்சலேஸ் சான் இணையை 21-17, 21-15 என்று 37 நிமிடங்களில் நேரடி செட்களில் எளிதில் வீத்தியது.

கடந்த ஐந்து போட்டிகளில், அந்த தைவான் ஜோடியை எதிர்த்து விளையாடிய மலேசியாவுக்கு இது நான்காவது வெற்றியாகும்.

நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதியில், தங் ஜிய் - ஏ வேய் தைவானின் யாங் பிஓ எச் அமிலம் - ஹு லின் ஜிஎஃப் ஆங் அல்லது தாய்லாந்தின் பக்கபொன் தீரரட்சகுல் - சப்சிரீ தாேரத்தநாச்சை இணையரைச் சந்திக்கக்கூடும்.

பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ