வட இத்தாலி, 21 நவம்பர் (பெர்னாமா) -- டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டி, போலோக்னா-வில் நடைபெற்று வரும் நாடுகளுக்கு இடையிலான இப்போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் செக் குடியரசை வீழ்த்தி ஸ்பெயின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஆனால், ஸ்பெயினின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ் காயம் காரணமாக கடைசி நிமிடத்தில் விலகினார்.
செக் குடியரசு உடனான இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் பின்னடைவைச் சந்தித்தது.
ஸ்பெயினின் பாப்லோ கரெனோ புஸ்டா 7-5, 6-4 என்ற நிலையில் ஜக்குப் மென்சிக்-கை வீழ்த்தினார்.
இருப்பினும், ஸ்பெயின் அணி ஜௌம் மூனார் மூலம் மீண்டு வந்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 6-3, 6-4 என்ற நிலையில் ஜிரி லெஹெக்கா தோற்கடித்தார்.
இரு நாடுகளும் சமநிலையில் இருந்தபோது, இரட்டையர் பிரிவு ஆட்டத்தின் மூலம் இறுதியில் ஸ்பெய்னின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.
மார்செல் கிரானோலர்ஸ் - பெட்ரோ மார்டினெஸ் 7-6, 7-6 என்ற புள்ளிகளில் செக் குடியரசின் இணையை வீழ்த்தி அடுத்த சுற்றில் கால் வைத்தனர்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)