பங்சார் , 23 நவம்பர் (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது பூப்பந்து பட்டத்தை நாட்டின் கலப்பு இரட்டையரான சென் தங் ஜி - தோ ஈ வெய் கைப்பற்றினர்.
இன்று நடைபெற்ற, இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் முன்னணி இணையரான அவர்கள் இந்தோனேசியா ஜோடியை வீழ்த்தி கணித்தது போலவே வெற்றிப் பெற்றனர்.
சிட்னி ஒலிம்பிக் அரங்கில், நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் அவர்கள் இந்தோனேசியா போட்டியாளர் சந்தித்தனர்.
அதில், 42 நிமிடங்களில் 21-16, 21-11 என்று நேரடி செட்களில் தங்களின் வெற்றியை அவர்கள் உறுதி செய்தனர்.
உலக பூப்பந்து சம்மேளனத்தின் தொடர் போட்டிகளில் ஒன்றில் வெற்றிப் பெற்றுள்ள இவர்கள், கடந்த ஆண்டில் கொரியப் பொது பூப்பந்துப் போட்டியின் வெற்றியாளர் பட்டத்தையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)