விளையாட்டு

தேசிய விளையாட்டு மன்றம் வெள்ள நிலையைக் குறித்து சிறப்பு கண்காணிப்பு

26/11/2025 05:41 PM

புத்ராஜெயா, நவம்பர் 26 (பெர்னாமா) -- வெள்ளப் பேரிடர் குறித்த அண்மைய நிலவரங்களைப் பெற தேசிய விளையாட்டு மன்றம் MSN சிறப்பு கண்காணிப்பு குழுவை தாய்லாந்தின் சொங்க்லா நகருக்கு அனுப்பியுள்ளது.

2025-ஆம் ஆண்டு தாய்லாந்து சீ விளையாட்டிற்கான தயார்நிலை பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக MSN-னும் மலேசிய ஒலிம்பிக் மன்றம் MOM-மும் அந்நாட்டின் செயலகக் குழுவுடன் நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொண்டு வருவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.

தாய்லாந்தில் பேரிடர் நிலைமை இன்னும் முழுமையாக சீரடையாத நிலையில் மலேசிய விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பே இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு KBS-இன் முன்னுரிமை என்று Hannah Yeoh கூறினார்.

"பாதுகாப்புப் பிரச்சினை குறித்து நான் ஏற்கனவே வெளியுறவு அமைச்சு (கே.எல்.என்) உடன் ஆலோசித்துவிட்டேன். தற்போது நாங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன் கே.எல்.என்-இன் ஆலோசனையைத் தொடர்ந்து பெறுவோம். ஆனால், தற்போதைய நிலையில் செயலகத்துடன் தொடர்பு கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வேண்டும். தெற்கு சொங்க்லா என்பது போர் விளையாட்டுகளுக்கு மட்டுமே. நாங்கள் செய்திகளில் படித்தபடி, பாதிக்கப்பட்ட இடம் கால்பந்துக்கான இடம்" என்றார் ஹன்னா யோ. 

இந்த நெருக்கடியான நேரத்தில் மலேசியா தாய்லாந்திற்கு அழுத்தம் கொடுக்காது. எனினும், பாதிக்கப்பட்ட இடங்கள் காரணமாக இறுதி நேரத்தில் இடமாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று தளவாட திட்டத்தை தங்கள் தரப்பு மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)