கோலாலம்பூர், டிசம்பர் 03 (பெர்னாமா) -- ஐந்து நீதிபதிகளுக்கான நியமன கடிதங்களை மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று இஸ்தானா நெகாராவில் வழங்கினார்.
இஸ்தானா நெகாராவின் சிறிய சிம்மாசனம் SINGGAHSANA KECIL மண்டபத்தில் நடைபெற்ற இச்சடங்கில் மலாயாத் தலைமை நீதிபதி டத்தோ ஹாஷிம் ஹம்சாவிற்கு நியமன கடிதத்தை வழங்கியதும் தொடங்கியது.
கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளான டத்தோ சே முஹமட் ருசிமா கசாலி, டத்தோ முஹமட் நஸ்லான் முஹமட் கசாலி, டத்தோ அசிமா ஒமார் அசிமா உமர் மற்றும் டத்தோ கோலின் லாரன்ஸ் செக்வேரா ஆகியோருக்கும் மாமன்னர் நியமன கடிதங்களை வழங்கினார்.
முன்னதாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹாஷிம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி கட்டாய பணி ஓய்வு பெற்ற டான் ஸ்ரீ ஹஸ்னா ஹாஷிமுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)