பெர்லின், டிசம்பர் 04 (பெர்னாமா) -- யூனியன் பெர்லினுடன் நடைபெற்ற ஆட்டத்தில் களமிறங்கிய பாயர்ன் முனிக் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஹெரி கேன் இப்பருவத்தில் தமது 25வது கோலை அடித்து சாதனை புரிந்தார்.
இதன் வழி 3-2 என்ற கோல்களில் வெற்றி பெற்ற பாயர்ன் ஐரோப்பிய கிண்ணத்திற்கான காலிறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகியது.
பெர்லினில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் பாயர்ன் பதினொன்றாவது நிமிடத்தில் யூனியன் பெர்லின் அடித்த சொந்த கோலால் முன்னிலை வகித்தது.
புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பாயர்ன் 23வது நிமிடத்தில் ஹெரி கேன் வழி ஆட்டத்தைச் சமப்படுத்தியது.
யூனியன் அணிக்குப் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்ட பிறகு ஆட்டம் உற்சாகமாக மாறியது.
அதை லியோபோல்ட் குவர்ஃபேல்ட் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டு தமது அணிக்கான முதல் கோலைப் பெற்றுத் தந்தார்.
இருப்பினும் யூனியன் பெர்லியின் மற்றொரு ஆட்டக்காரர் மீண்டும் சொந்த கோலை அடித்ததால் 3-1 என்ற நிலையில் பாயர்ன் முன்னணி வகித்தது.
நிறைவாக 54வது நிமிடத்தில் குவர்ஃபேல்ட் யூனியன் அணிக்கு இரண்டாவது கோலை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.
சபாவில் கனிம ஆய்வு உரிமங்களை அங்கீகரிப்பதில் மொத்தம் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 829 ரிங்கிட் 3 சென் கையூட்டு பெற்றதாகப் பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முஹமட் அகின் மீது இன்று கோலாலம்பூர் செஷன் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
நீதிபதி சுசானா ஹுசின் முன் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டுகளை 50 வயதான அவர் மறுத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)