பொது

வழக்கு விசாரணைக்காக நால்வரை தேடும் எஸ்.பி.ஆர்.எம்

27/02/2026 07:03 PM

புத்ராஜெயா, 27 பிப்ரவரி (பெர்னாமா) -- ஒரு வழக்கின் விசாரணைக்கு உதவும் பொருட்டு, அஸ்னிடா அப்துல் டைம், முஹமட் வீரா டானி அப்துல் டைம், முகமது அமீர் சைனுதீன் டைம் மற்றும் முஹமட் அமீன் சைனுதீன் டைம் ஆகிய நால்வரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தேடி வருகிறது.

அவர்கள் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் முன்வந்து விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி எஸ்.பி.ஆர்.எம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அஸ்னிடாவின் இறுதி முகவரி சிலாங்கூர், காஜாங், No. 6, Lot 545, Lorong Pelangi Pagi D, Country Heights ஆகும் என்று எஸ்.பி.ஆர்.எம் தெரிவித்துள்ளது.

அவரைத் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி முஹ்மட் டாயிம் முஹ்மட் அலியை 017-9127217 தொலைப்பேசி எண் மற்றும் mohamad.daeem@sprm.gov.my மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனிடையே; முஹமட் வீராவின் இறுதி முகவரி கோலாலம்பூர், No. 333, Jalan Kolam Air, Taman Melawati, உலு கிள்ளான் ஆகும்.

அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி அஹ்மட் ஐமான் ரம்லியை 011-61930814 தொலைப்பேசி எண் மற்றும் ahmad.aiman@sprm.gov.my மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]