விளையாட்டு

ரொனால்டோவின் சாதனையை முறியடிக்க எம்பாப்பே இலக்கு

05/12/2025 05:05 PM

கோலாலம்பூர், டிசம்பர் 05 (பெர்னாமா) -- ரியல் மாட்ரிட் கிளப்பின் உச்ச நட்சத்திரம் கிலியன் எம்பாப்பே அதன் முன்னாள் ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை முறியடிக்க இலக்குக் கொண்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு முழுவதும் 59 கோல்களைப் போட்டு சாதனைப் படைத்த ரொனால்டோவின் சாதனையை முறியடிக்கும் நோக்கத்தில் நாளை அதிகாலை செல்டா வீகோவுக்கு எதிரான ஆட்டத்தில் எம்பாபே களமிறங்குகிறார்.

இவ்வாண்டில் இதுவரை நடைபெற்ற 55 ஆட்டங்களில் அவர் 55 கோல்களை அடித்துள்ளார். 

2025ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐந்து போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் பிரான்ஸ் ஆட்டக்காரரான கிலியன் எம்பாப்பேவுக்கு அச்சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

அத்லெடிக் பில்பாஓவுக்கு எதிரான ஆட்டத்தில் இருகோல்கள் அடித்திருக்கும் வேளையில் உலகக் கிண்ண வெற்றியாளரான அவரின் கோல் போடும் முயற்சிகள் இந்த வாரமும் தொடர்ந்தது.

கடந்தாண்டு பாரிஸ் செயின்ட்-ஜெர்மன் கிளப்பில் இருந்து ரியல் மெட்ரிட்டுக்கு வந்து சேர்ந்த எம்பாப்பே இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஒரு சிறந்த தாக்குதல் ஆட்டக்காரரா மாறியுள்ளார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)