பொது

விமர்சிப்போரை விசாரிக்க வேண்டாம் - பிரதமர் வலியுறுத்து

05/12/2025 05:30 PM

சைபர்ஜெயா, டிசம்பர் 05 (பெர்னாமா) -- குற்றவியல் அம்சங்கள் மற்றும் அது தொடர்பிலான கூறுகள் குறித்து விவாதிக்காத வரையில் தமது தரப்பை விமர்சிக்கும் எந்தவொரு நபரையும் விசாரிக்க வேண்டாம் என்று அரச மலேசிய போலீஸ் படைக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் விமர்சனங்கள் அரசியல் நோக்கத்தை மட்டுமே கொண்டிருந்தால் அவர்களுக்கு எதிராகப் பி.டி.ஆர்.எம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று நிதியமைச்சருமான டத்தோ அன்வார் தெரிவித்தார்.

''என் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட அரசாங்கத்தை விமர்சிக்கும் சில தரப்பினருக்கு எதிராக நடவடிக்கைகளோ அல்லது விசாரணைகளோ மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று நான் அறிவுறுத்துகிறேன். அவ்வாறு விமர்சிப்போரின் நோக்கங்கள் என்ன என்பதை நான் மறுக்கவில்லை. சில நேரங்களில் அவை ஆதாரமற்றவையாக இருக்கும்,'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.

இன்று சைபர்ஜெயா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)