கோலாலம்பூர், டிசம்பர் 08 ( பெர்னாமா) -- மக்களின் நலனுக்காக நாட்டின் அரசியல் நிலைத்தன்மையைப் பயன்படுத்தி முறையான திட்டங்களை திட்டமிட்டு தெளிவாக செயல்படுத்துமாறு அனைத்துத் தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பொருளாதார வளர்ச்சி வேலையின்மை விகிதத்தைக் குறைத்தது உட்பட வரலாற்றில் மிக உயர்ந்த முதலீட்டு விகிதத்தை அடைந்தது ஆகியவை அரசியல் நிலைத்தன்மையின் மூலம் அடையப்பட்ட வெற்றி என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''கடந்த சில ஆண்டுகளாக அரசியல் குழப்பம் நிலவியிருந்தது. தற்போது மூன்று ஆண்டுகளாக அரசாங்கமும் அரசியலும் நிலையாக உள்ளன. அவை நிலையாக இருக்கும்போது, அது வழக்கமாக இருந்தாலும் அரசியலை கொஞ்சம் படிக்கலாம்; அதுவே போதும். அதனால் மயங்கிப் போகாதீர்கள். ஆனால் நான் இங்கே வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், நிலையான தேசிய அரசியலைப் பயன்படுத்தி ஒரு தெளிவான திட்டத்தை வகுத்து அதை செயல்படுத்த வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
தமது முயற்சியால் மட்டுமே இவ்வெற்றி அடையப்படவில்லை என்றும் மாறாக ஒட்டுமொத்த அமைச்சரவை உதவியாலும் உறுதிப்பாட்டாலும் அடையப்பட்டதாகவும்,
இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற பொதுப்பணி அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)