பொது

நியூ சவுத் வேல்சில் காட்டுத் தீ; 20 வீடுகள் சேதம்

08/12/2025 04:27 PM

ஆஸ்திரேலியா, 08 டிசம்பர் (பெர்னாமா) --  ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் எரிந்து சேதமான வீடுகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.

இதில் சென்ட்ரல் கோஸ்ட்டில் 16-உம், மிட் நோர்ட் கோஸ்ட்டில் நான்கு வீடுகளும் அடங்கும்.

சென்ட்ரல் கோஸ்ட், கூலெவோங், நிம்பின் ர்ட்டில் ஏற்பட்ட தீச்சம்பவத்தை மதிப்பீடு செய்ததில் அங்கு 16 வீடுகள் முற்றாக அழிந்ததையும் ஒன்பது வீடுகள் சேதமடைந்ததையும் கட்டிட பாதிப்பு மதிப்பீட்டுப் படை உறுதிப்படுத்தியது.

பாதிக்கப்பட்டவர்கள் நிதியுதவியைப் பெறுவதற்கு உடனடியாக தகுதியுடையவர்கள் என்ற அடிப்படையில், நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் ஆறு பகுதிகளில் இயற்கை பேரிடர் அறிவிக்கப்பட்டுள்ளது

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)