பொது

சுயமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சூடுபட்டு இரண்டாம் படிவ மாணவர் பலி

08/12/2025 04:32 PM

சபா, டிசம்பர் 08 ( பெர்னாமா) -- சபா, கெனிங்காவில் உள்ள ஜாலான் கேம் பி.பி.எச்இல் தன் நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்தபோது "bakakuk" என்று அறியப்படும் சுயமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்ட இரண்டாம் படிவ மாணவர் ஒருவன் உயிரிழந்தான்.

நேற்று காலை மணி 8 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அம்மாணவர் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் சுமார் மூன்று மீட்டர் தூரத்திலிருந்து அந்த நண்பர் தவறுதலாக அம்மாணவரை சுட்டதாக கெனிங்கௌ மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் யாம்பில் அனக் கரை தெரிவித்தார்.

ஜாலான் கேம் பி.பி.எச்-இல் வீட்டின் முன்புறத்தில் சூடுபட்டு உயிரிழந்த அம்மாணவர் bakakuk வகை துப்பாக்கியைக் கையில் வைத்திருந்ததைக் கண்ட சக நண்பர் அதனை பார்ப்பதற்காக கேட்டு பெற்றிருக்கிறார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கண்காணிப்பாளர் யாம்பில்  தெரிவித்தார்.

பின்னர் துப்பாக்கியைக் காட்டி அவரின் நண்பர் விளையாடிய போது அம்மாணவர் அருகில் இருந்த சுவற்றின் பின்புறத்தில் ஒளிந்து கொண்டதாகவும் நம்பப்படுகிறது.

கையில் இருந்த bakakuk துப்பாக்கியில் தோட்ட இருப்பதை உணராத அந்த நண்பர் அதனை அழுத்தியதால் அதிலிருந்த குண்டு மாணவரைத் துளைத்தது.

பலியான மாணவரின் உடலை மேலும் பரிசோதித்ததில், வலது மார்பு, வலது கை, வலது மற்றும் இடது முழங்கால்களில் 14 சந்தேகத்திற்குரிய துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் யாம்பில் அனக் கரை தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)