விளையாட்டு

உலக மின்னியல் விளையாட்டு போட்டியில் மலேசியா வெற்றி

08/12/2025 04:39 PM

கோலாலம்பூர், 08 டிசம்பர் (பெர்னாமா) --  2025 IESF Mobile Legends: Bang Bang உலக மின்னியல் விளையாட்டு போட்டியில் நடப்பு வெற்றியாளர் பட்டத்தை தற்காத்து, அனைத்துலக ரீதியில் மீண்டும் வரலாறு படைத்துள்ளது மலேசியா.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் கம்போடியாவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து மலேசியா வெற்றி பதகத்தை வென்றது.

Quill City பேரங்காடி நிலையத்தில் ஏற்பட்ட செய்யப்பட்ட இப்போட்டியில் 22 நிமிடங்கள் நீடித்த முதல் சுற்றில் வெற்றி பெறுவதற்கு முன் மலேசியா கடும் சவாலை எதிர்கொண்டது.

இரண்டாவது சுற்றில் இட்ரின் ஜமால், முஹமட் கய்யூம் அரிஃபின் முஹமட் சுஹைரி, முஹமட் ஹக்குல்லா அஹ்மாட் ஷாருல் சமான், ஹசிக் டெனிஷ் முஹமட் ரிஸ்வான் மற்றும் எல்தோன் ரெய்னர் ஆகியோர் கொண்ட தேசிய அணி 8 நிமிடங்களில் வெற்றியைப் பதிவு செய்தது.

மூன்றாவது சுற்றை வெறும் 17 நிமிடங்களிலேயே மலேசியா கைப்பற்றியது

2024 ஆம் ஆண்டு சவூதி அரேபியா ரியாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிலிப்பைன்ஸை 2-0 எனத் தோற்கடித்ததற்கு பின்னர், மின்னியல் விளையாட்டில் மலேசியா தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)