ஜோகூர் பாரு , நவம்பர் 09 (பெர்னாமா) -- 511,544 மலிவு விலை வீடுகளை மடானி அரசாங்கம் வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளது.
12-வது மலேசியா திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஐந்து லட்சம் வீடுகளை கட்டிமுடிக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த எண்ணிக்கை கடந்துள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் வழி இந்த வெற்றி அடையப்பட்டதாக ஙா கோர் மிங் விளக்கினார்.
''இதற்கு முன் எந்த முந்தைய அரசாங்கமும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதில் வெற்றி பெற்றதில்லை. மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், 500,000 மலிவு விலை வீடுகளைக் கட்டும் இலக்கை அடைந்தது மட்டுமல்லாமல், அதை (இலக்கு) கடந்து வரலாற்றைப் படைத்த முதல் அரசாங்கமாக மாறியுள்ளது,'' என்றார் அவர்.
செவ்வாய்க்கிழமை, ஜோகூர் பாருவில், Vista Tiara Johor Bahru வீடமைப்பு திட்டத்தின் சாவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், ஙா செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)