உலகம்

வன்முறையில் ஈடுபட்ட மெஸ்சி ரசிகர்கள்

14/12/2025 01:00 PM

கொல்கத்தா, டிசம்பர் 14 (பெர்னாமா) -- இந்தியா, கொல்கத்தாவிற்கு சென்றுள்ள அர்ஜென்டினா காற்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்சியை பார்க்க முடியாத சூழ்நிலை நிலவியதால், ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

அரசங்கத்தில் நீண்ட நேரம் காத்திருந்து மெஸ்சியை காண முடியாத ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்கள், நாற்காலிகளை தூக்கி வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.

கொல்கத்தாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க காற்பந்து ஜாம்பவான் மெஸ்சி வருகை தந்துள்ளார்.

2025 கோட் (GOAT) இந்தியா TOUR-இன் ஒரு பகுதியாக, காற்பந்து அரங்கில் ரசிகர்களை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேடை ஏறிய மெஸ்சியை சுற்றி பாதுகாவலர்களும், அரசியல் மற்றும் உள்ளூர் பிரபலங்களும் சூழ்ந்ததால், ரசிகர்களால் அவரை காண இயவில்லை.

அதனால் ரசிகர்கள், கையில் இருந்த பாட்டில்களை வீசியும் நாற்காலிகளை உடைத்து வீசியெறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக, மெஸ்சியை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)