ஷா ஆலம், 10 டிசம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கும், ஷா ஆலம் வழித்தடத்திற்கான இலகு ரயில் எல்.ஆர்.டி சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எல்.ஆர்.டி சேவை இன்னும் சோதனை மற்றும் பாதுகாப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால், அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை உரிமத்திற்கான விண்ணப்பத்தை தரை பொதுப் போக்குவரத்து நிறுவனம், ஏ.பி.ஏ.டி செய்வதற்காக, தொழில்நுட்ப ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் முன்னர் சோதனை முன்னோட்டம், தவறு இல்லாத ஓட்டச் சோதனை மற்றும் சோதனைச் செயல்பாடு ஆகியவை இதில் அடங்கும் என்று செத்தியா உத்தமா எல்.ஆர்.டி3 நிறுவனம், எஸ்.யு.எல்.ஆர்.தி3-இன் திட்ட இயக்குநர் நர்பாட்ரீக் ஹ்வாங் கூறினார்.
வழிதடத்தில் ரயில் முறையாக நிற்க தவறுவது, அதன் விளைவாக கதவுகள் செயல்படாமல் இருப்பது, அடுத்த நிலையத்திற்கு தொடர முடியாமல் போவது, மென்பொருள் தவறுகள் மற்றும் அமைப்பு சீர்குலைவுகள் என மொத்த 33 சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பாட்ரீக் ஹ்வாங் விவரித்தார்.
"அந்த 33, உண்மையில், பெரும்பாலான சிக்கல்கள் முன்னதாக தீர்க்கப்பட்டு, மென்பொருள் இணைப்பும் முடிந்துவிட்டது என்பதற்கு எங்களிடம் ஒரு தீர்வு உள்ளது. ஆனால் ஒவ்வொரு மென்பொருளும் அதன் இணைப்பின் மூலம் தீர்க்கப்பட்ட பிறகு, அந்த தீர்வு நம்பகமானதா இல்லையா என்பதை கண்காணிக்க நாம் இன்னும் சோதனையைத் தொடர வேண்டும்" என பாட்ரீக் ஹ்வாங் கூறினார்.
பிரதான ரயில் அல்லது (Golden Train) ஆகியவற்றை உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட எஃப்.எஃப்.ஆர் சோதனை எவ்வித தோல்வியும் இல்லாமல் 4,000 கிலோமீட்டர் இடைவிடாமல் செயல்பட்டது.
அதே குழுவில் உள்ள மற்றொரு ரயில் 3,000 கிலோமீட்டர் சோதனைக்கு உள்ளடக்கப்பட்டதாகவும், எஞ்சிய ரயில்கள் இயக்க ஒப்புதல் பெறுவதற்கு முன்னதாக 2,500 கிலோமீட்டரை நிறைவுச் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் விளக்கினார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)