பொது

தாய்லாந்து - கம்போடியா மோதல்; 514 பள்ளிகள் மூடப்பட்டன

10/12/2025 06:34 PM

கம்போடியா, டிசம்பர் 10 ( பெர்னாமா) -- தாய்லாந்து - கம்போடியா இடையே மீண்டும் ஏற்பட்டிருக்கும் மோதலை அடுத்து எல்லைப் பகுதியில் உள்ள 514 பள்ளிகள் மூடப்பட்டதாக கம்போடியா அரசாங்கம் தெரிவித்தது.

நேற்றைய நிலவரப்படி மொத்த 514 பள்ளிகள் மூடப்பட்டதால் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களும் 4,650 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான மோதலில் ஒட்டார் மீன்ச்சே, பிரியா விஹார் மற்றும்பான்டே மீன்ச்சே ஆகிய மாகாணங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கிய இம்மோதலில் ஏழு கம்போடிய பொதுமக்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் துணைச் செயலாளரும் செய்தி தொடர்பாளருமான லெப்டினன்ட் ஜெனரல் மாலி சோச்சீட்டா, நேற்று அறிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)