உலகம்

தொடரும் கம்போடிய - தாய்லாந்து மோதல்; டிரம்புடன் பேச்சுவார்த்தை

12/12/2025 04:45 PM

பேங்காக், டிசம்பர் 12 (பெர்னாமா) -- ஐந்தாவது நாளாகத் தொடரும் கம்போடிய - தாய்லாந்து மோதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்ப் உடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தாய்லாந்து இடைக்கால பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்தார்.

தாய்லாந்து நேரப்படி இன்றிரவு மணி 9.20 அளவில் அந்தத் தொலைபேசி உரையாடல் நடத்தப்படும் என்று அனுடின் செய்தியாளர்களிடம் கூறினார்.

தாம் மத்தியஸ்தராக இருந்து கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தில் மீண்டும் தலையிட டிராம் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறினார்.

இந்நிலையில் சண்டையை நிறுத்தும் முயற்சியாக இரு நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் உறுதியளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)