பேங்காக், டிசம்பர் 13 ( பெர்னாமா) -- 2025 தாய்லாந்து சீ விளையாட்டில், பூப்பந்து போட்டியில், தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற சென் தாங் ஜீ - தோ ஈ வேய் ஜோடியின் கனவு நிறைவேறாமல் போனது.
கலப்பு இரட்டையர் அரையிறுதி சுற்றில், தாய்லாந்து அணியிடம் மலேசிய ஜோடி, தோல்வி அடைந்ததை அடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறத் தவறியது.
பேங்காக், தாம்மசாட் ரங்சிட் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற அரையிறுதி சுற்றில், சென் தாங் ஜீ - தோ ஈ வேய், உலக தரவரிசையில் 13-ஆம் இடத்தில் உள்ள ருத்த்னபாக் ஒப்தொங் - ஜெனிச்சா சுட்ஜப்ரபராட் ஜோடியைச் சந்தித்தனர்.
அதில், 15–21, 16–21 என்று தாய்லாந்து ஜோடி, 31 நிமிடங்களில் எளிதாக மலேசிய இணையை வீழ்த்தியது.
போட்டி முழுவதும் ஏற்பட்ட அழுத்தத்தை சிறப்பாகக் கையாளத் தவறியதாக தோ ஈ வேய் ஒப்புக்கொண்டார்.
இதன் காரணமாக, அந்தப் போட்டியில் தமது இணை செயல்திறன் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தத் தோல்வியானது, மலேசியப் பூப்பந்து சங்கம் நிர்ணயித்திருந்த நான்கு தங்கப் பதக்க இலக்கையும் பாதித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)