விளையாட்டு

தாய்லாந்து சீ போட்டி; சாதனையை முறியடித்த தேசிய மகளிர் சுத்தியல் எறிதல் வீராங்கனை

14/12/2025 02:42 PM

தாய்லாந்து, 14 டிசம்பர் (பெர்னாமா) -- தாய்லாந்து 2025 சீ விளையாட்டுப் போட்டியில் தேசிய மகளிர் சுத்தியல் எறிதல் வீராங்கனை கிரேஸ் வோங் சியு மேய் தங்கம் வென்றதுடன் தொடர்ச்சியாக நான்கு முறை சீ விளையாட்டுப் போட்டியின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

இதன் வழி அனைத்துலக அரங்கில் போட்டியிட்டு வெற்றி பெறும் சிறந்த ஆற்றலை அவர் கொண்டிருப்பதாக மலேசிய தடகளத் தலைவர் டத்தோ கரிம் இப்ராஹிம் கூறுகிறார்.

''இது சீ விளையாட்டுப் போட்டி, தென்கிழக்காசியா மற்றும் ஆசிய நிலைகளை உள்ளடக்கிய ஒரு முக்கியமான சாதனையாகும். இப்போட்டியில் அவர் மொத்தம் நான்கு முறை சாதனைகளை முறியடித்துள்ளார். அதில் இரண்டு சீ விளையாட்டு சாதனைகள் மற்றும் இரண்டு மலேசிய தேசிய சாதனைகளும் அடங்கும். மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முன்பு 64 மீட்டர் தூரத்துடன் வெண்கலப் பதக்கம் வென்று மூன்றாம் இடம் பெற்றிருந்த அவர், தற்போது தமது திறனை மேம்படுத்தி 65 மீட்டரை எட்டியுள்ளார். எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதிக்க அவருக்கென சிறப்பான திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம்.'' என்றார் டத்தோ கரிம் இப்ராஹிம் 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய மற்றும் காமன்வெல்த் போன்ற முக்கிய விளையாட்டு போட்டிகளை எதிர்கொள்ள கிரேஸ்சுக்குச் சிறந்த பயிற்சி திட்டங்களை வகுப்பதற்காக தேசிய விளையாட்டு மன்றத்திடம் கலந்து ஆலோசிக்கபப்டும் என்று கரீம் இப்ராஹிம் தெரிவித்தார்.

மேலும், கிரேஸ்சின் சாதனைகளைப் பாராட்டி அவருக்கு நான்கு ஆயிரம் ரிங்கிட் ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாகவும் டத்தோ கரிம்அறிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் கிரேஸ் அபாரத் திறனை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ