உலகம்

ஜோர்டன் மன்னரைச் சந்தித்த மோடி

16/12/2025 06:08 PM

அம்மான், டிசம்பர் 16 (பெர்னாமா) -- நேற்று திங்கட்கிழமை அம்மான் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டன் மன்னர் இரண்டாம் அப்துல்லாவைச் சந்தித்தார்.

இந்த இருவழி சந்திப்பைத் தொடர்ந்து அவ்விரு நாடுகளும் 75 ஆண்டுகால அரச தந்திர உறவுகளைக் கொண்டாடவிருப்பதாக மன்னர் அப்துல்லா கூறினார்.

மோடியின் வருகை பல ஆண்டுகால நட்பு, பரஸ்பர மரியாதை மற்றும் உற்பத்தி ஒத்துழைப்பைப் பிரதிபலிப்பதாக மன்னர் அப்துல்லா கூறினார்.

இந்தியாவும் ஜோர்டனும் ஒரு வலுவான பங்காளித்துவத்தையும் மக்களின் செழிப்பை மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட விருப்பத்தையும் அனுபவிப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை அம்மானுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டார்.

இந்த வருகை தங்களின் இரு நாடுகளுக்கு இடையிலான இருவழி உறவுகளை அதிகரிக்கும் என்று அவர் தமது கீச்சக பதிவில் குறிப்பிட்டார்.

விமான நிலையத்தை வந்தடைந்த மோடியை ஜோர்டன் பிரதமர் ஜாஃபார் ஹசான் வரவேற்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)