விளையாட்டு

சீ விளையாட்டு; மலேசிய கபடி அணிக்கு இரண்டு தங்கம்

19/12/2025 04:42 PM

பேங்காக், டிசம்பர் 19 (பெர்னாமா) -- பேங்காக், ராஜாமங்கலா ரத்தனாகோசின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில், கபடி அணி முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது.

நேற்றிரவு நடைபெற்ற மூன்று நட்சத்திர போட்டியின் இறுதிச் சுற்றில் மலேசியாவைச் சேர்ந்த ஆடவர் அணி தாய்லாந்தை வீழ்த்தி அந்த வெற்றியைப் பதிவு செய்தது.

தாய்லாந்து அணியை 28-16 என்ற புள்ளிகளில் மலேசிய ஆடவர் அணி வீழ்த்தியது.

இதன் மூலம், 33-வது சீ விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக இணைக்கப்பட்டிருக்கும் கபடி போட்டியில் தமது முதல் தங்கப் பதகத்தை வென்று மலேசிய கபடி அணி வரலாறு படைத்தது.

இந்த வெற்றி குறித்து மலேசிய கபடி சங்கத் தலைவர் பத்மநாதன் வெங்கட்ராமன் தமது மகிழ்ச்சியை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

''சீ விளையாட்டில் நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பதக்கம் இதுதான். இது 2025-ஆம் ஆண்டு சீ விளையாட்டின் கபடி போட்டியின் வெற்றிக்குக் கிடைத்தது,'' என பத்மநாதன் வெங்கட்ராமன் கூறினார்.

மற்றொரு நிலவரத்தில், மூன்று நட்சத்திர தங்கப் போட்டியின் இறுதிச் சுற்றில், மலேசிய மகளிர் அணி இந்தோனேசியாவிடம் 22-23 என்ற புள்ளிகளில் தோல்விக் கண்டு வெள்ளிப் பதக்கம் வென்றது.

வழக்கமான கபடி போட்டியை விட வேகமாகவும் தீவிரமாகவும் இருக்கும் வகையில் மூன்று நட்சத்திர கபடி போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒரு குழுவில் ஏழு விளையாட்டாளர்கள் கலந்து கொள்வதைக் காட்டிலும் இப்போட்டியில் மூன்று விளையாட்டாளர்கள் மட்டுமே கலந்து கொண்டதோடு, விளையாடுவதற்கு மிக சிறிய இடமே பயன்படுத்தப்பட்டது.

இவ்வாண்டு சீ விளையாட்டு போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்கள் வெல்வதை மலேசிய கபடி அணி இலக்காகக் கொண்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)