கோலாலம்பூர், டிசம்பர் 22 (பெர்னாமா) -- கடந்த ஜூலை மாதம் முதல் நீடித்து வரும் எல்லை மோதலை முடிவுக்குக் கொண்டுவர கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்றி செயல்படுத்துமாறு கம்போடியாவும் தாய்லாந்தும் வலியுறுத்தப்படுகின்றன.
வட்டார நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு கடந்த அக்டோபர் 26ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணைங்குவது அவசியம் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் எடுத்துரைத்தார்.
''இதன் விளைவாக ஜூலை 28-ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அதைத் தொடர்ந்து ஒரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள், அத்துடன் கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தம் ஆகியவற்றில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி இரு நாடுகளின் பிரதமர்களும் கையெழுத்திட்டனர். மேலும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆகியோர் சாட்சிகளாக இருந்தனர். இந்த ஒப்பந்தங்களை முழுமையாக திறம்பட செயல்படுத்த இரு தரப்பினரும் முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.'' என்றார் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான்
அந்த நீண்ட கால மோதலினால் பொதுமக்களின் உயிரிழப்பு, வருமான பாதிப்புஉள்நாட்டு அகதிகள் பிரச்சனைகளையும் ஏற்படுத்தியது வருத்தத்தை அளிப்பதாக ஹசான் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)