கோலாலம்பூர், டிசம்பர் 23 (பெர்னாமா) -- மலேசிய ஊடக மன்றம் எம்.எம்.எம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டதைத் தொடர்ந்து 2025 ஊடகவியலாளர்களுக்கு மிகவும் அர்த்தமுள்ள ஆண்டாகக் கருதப்படுவதோடு ஊடகத்துறையின் சீர்திருத்தத்தில் ஒரு முக்கியமான நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.
52 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைப்பட்ட இத்திட்டம் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க பன்முகத்தன்மை கொண்ட கருத்துகளை மதிக்க உண்மையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியிடலை வலியுறுத்த மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப தற்போது மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கையாகும்.
மலேசிய பத்திரிகை கழகம் எம்.பி.ஐ போன்ற கழகங்களிடமிருந்து பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில், பத்திரிகைகளின் தரங்களைக் கண்காணிக்கவும் பொதுமக்களின் புகார்களைப் பெறவும் அச்சு, மின்னியல் மற்றும் இலக்கவியல் ஊடகங்களுக்கான முக்கியக் குறிப்பாகச் செயல்படவும் எம்.எம்.எம் நிறுவப்பட்டது.
நாட்டின் தகவல் விநியோகம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சட்ட மசோதா குறித்து 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறியது போல நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட மசோதாவைத் தாக்கல் செய்ததை உள்ளடக்கி எம்.எம்.எம்மை உருவாக்கும் செயல்முறை அமைந்தது.
2025ஆம் ஆண்டு தேசிய ஊடகவியலாளர் தினம் ஹவானா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜூன் 14ஆம் தேதி மலேசிய ஊடக மன்ற சட்டம் அமல்படுத்தத் தொடங்கப்பட்ட வேளையில் மலேசிய ஊடக மன்றம் எம்.எம்.எம் இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)