பொது

5 வியூக குழுக்களின் மூலம் மடானி சுகாதார சீர்திருத்தம் இயங்குகின்றது

24/12/2025 05:05 PM

கோலாலம்பூர், டிசம்பர் 24 (பெர்னாமா) -- சுகாதார சேவையை வலுப்படுத்தவும் பணியாளர்களுக்கு நியாயமான பணிச் சூழலை உருவாக்கவும் ஐந்து வியூக திரள் மூலம் மடானி சுகாதார சீர்திருத்தம் இயங்குகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகால சீர்த்திருத்த அமலாக்கத்தில் இந்நடவடிக்கை ஒரு அடிப்படை திருத்தமாகும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் கூறினார்.

மேலும், இது நாட்டின் சுகாதார அமைப்பின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உண்மையிலேயே தயாராக மற்றும் மீள்தன்மை கொண்டதாக இருப்பதை உறுதிச் செய்வதாக அவர் விவரித்தார்.

சுகாதார நிதி, வசதிகள் நெரிசல், தொற்றா நோய்களின் சுமை மற்றும் நீண்ட காலமாகத் தொடரும் பணியாளர்களின் சோர்வு உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களால் இச்சவால்கள் ஏற்படுவதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி கூறினார்.

எனவே, சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் அமைப்பை மாற்றுவதில் அதிக கவனம், தெளிவான செயல்பாடு மற்றும் கடப்பாட்டிற்கு முக்கியத்துவம் செலுத்தும், கழக மற்றும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் முதல் திரளில் அடங்கும் என்று இன்று தமது முகநூல் பதிவில் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, நடப்பிலுள்ள ஆற்றலைப் பயன்படுத்தியும் வசதிகளை நவீனமயமாக்கியும் சுகாதார சேவையை வழங்குவதில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் இரண்டாவது திரளும் 1971ஆம் ஆண்டு மருத்துவ சட்டத்தில் திருத்தம் மற்றும் சுகாதாரத்துறையின் அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான நிரந்தர பணி நியமன அமலாக்கம் உட்பட சுகாதார மனிதவள சீர்திருத்தம் மூன்றாவது திரளாகும்.

அனைவருக்கும் தரமான மற்றும் நியாயமான சுதார சேவையை உள்ளடக்கிய சுகாதார நிதி சீர்திருத்தம் நான்காவது திரளும் அதிகமான சீனி பயன்பாடு சிகரெட் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற முதன்மை ஆபத்துக்களுக்கு எதிரான சுகாதார அமைச்சின் கடுமையான அணுகுமுறைகளை உள்ளடக்கிய பொது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் தடுப்பில் சீர்த்திருத்தம் ஐந்தாவது திரளாகும்.

அதோடு, கழகத் திறனை வலுப்படுத்தும் பொறுப்புணர்வை தெளிவுப்படுத்தி கொள்கை அமலாக்கத்தை விரைவுப்படுத்தும் நடவடிக்கையாக இலக்கவியல் சுகாதாரப் பிரிவு மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு மையம் NCFS போன்ற வியூக நிறுவனங்கள் நிறுவப்படுவதாக அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சுகாதார அமைச்சு இந்நடவடிக்கை 2024ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகைப்பிடிக்கும் பொருள்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் சட்டம் 852 மற்றும் மிகவும் விரிவான தேசிய தடுப்பு திட்டங்கள் உள்ளிட்ட புதிய சட்டங்களின் அமலாக்கத்தின் வழு மேற்கொள்ளப்படும் என்று டாக்டர் சுல்கிஃப்லி விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)