பொது

தகவல் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய ஏஐ தொழில்நுட்பம் வியூக ரீதியாக இணைக்கப்பட வேண்டும்

27/12/2025 01:48 PM

புத்ராஜெயா, டிசம்பர் 27 (பெர்னாமா) -- நாட்டின் தகவல் சுற்றுச்சூழல் அமைப்பு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய இலக்கவியல் மற்றும் சமூக ஊடக பயன்பாட்டை வலுப்படுத்தி செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பம் வியூக ரீதியாக இணைக்கப்பட வேண்டும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியைப் புறந்தள்ளாமல் அதிகரித்து வரும் சிக்கலான இலக்கவியல் சூழலில் சமூகம் பெறும் தகவல்களை மதிப்பீடு செய்யவும் புரிந்துகொள்ளவும் மற்றும் தனிக்கை செய்யும் அதன் திறன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்திருக்கிறார்.

ஆரம்ப கட்ட எச்சரிக்கைகளை வழங்கவும் உள்ளடக்கங்களைத் தயாரிக்கவும் போலி தகவல்களைக் கண்டறியவும் ஏஐ ஓர் ஆதரவு அமைப்பாகச் செயல்படுகிறது.

இருப்பினும் ஏஐ தொடர்பான விளக்கங்களைப் பயனர்கள் பெற்றிருப்பது அவசியம் என்று டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

''தகவல்களைப் பெறுபவர்களாக, வாசகர்களாகப், பார்வையாளர்களாக, உண்மையான மற்றும் தவறான தகவல்களைத் தனிக்கை செய்ய நமக்கு என்ன குறிப்பிட்ட அணுகுமுறை இருக்க வேண்டும்? குறைந்தபட்சம் சில வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும். உதாரணமாக, நாம் ஒரு காரை ஓட்டினால் நாம் இன்னும் எல்லைக்குள் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்'', என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்.

அண்மையில் பெர்னாமா தலைமைச் செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துராஜ் ராஜ் தலைமையில் செய்தி சேவைக்கான இடைக்கால துணைத் தலைமை செய்தி ஆசிரியர் முஹமட் ஷுக்ரி இஷாக் பொருளாதார செய்தி சேவை நிர்வாக ஆசிரியர் எம். சரஸ்வதி ஆகியோர் நடத்திய பெர்னாமாவுடனான நேர்காணலில் ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)