கலிபோர்னியா, டிசம்பர் 27 (பெர்னாமா) -- தெற்கு கலிபோர்னியா முழுவதும் திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்திய மூன்று நாள்கள் பெய்த கனமழை வெள்ளிக்கிழமை தணிந்தது.
இச்சம்பவத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ரைட்வுட் நகரத்தில் வசிக்கும் சுமார் 5,000 குடியிருப்பாளர்கள் சேதத்தை மதிப்பிடத் தொடங்கியுள்ள வேளையில் மாவட்ட பாதுகாப்பு ஆய்வாளர்களும் சொத்து இழப்புகள் குறித்த ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளைத் தொடங்கினர்.
பலத்த காற்றுடன் கூடிய கனமழையால், மரங்கள் மற்றும் மின்கம்பிகள் சாய்ந்து விழுந்ததில் பல வீடுகள் சேதமடைந்தன.
மேலும், மலைப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவும் ஏற்பட்டது.
புயலினால் பாதிக்கப்பட்ட தெற்கு கலிபோர்னியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருந்தது.
இதனால் கிறிஸ்துமசுக்குப் பிறகு பயணிக்கும் லட்சக் கணக்கான வாகனமோட்டிகள் சிரமத்தை எதிர்நோக்கினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)