கோலாலம்பூர், 28 டிசம்பர் (பெர்னாமா) -- கொள்கை நிலைத்தன்மை, சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் துணிச்சல் மற்றும் மக்களின் நம்பிக்கை ஆகியவை மடானி அரசாங்கத்தின் இன்றைய வெற்றிக்கான உந்து சக்தியாகும்.
உள்நாட்டில், தரமான முதலீடுகள், வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் வழி பொருளாதாரம் தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துலக அளவில், அரசாங்கத்திற்கும் பல்வேறு நாடுகள் உட்பட உலகத் தலைமைத்துவங்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள், வியூக முதலீடுகளை ஈர்த்துள்ளதோடு உலக அரங்கில் மலேசியாவின் நிலையை வலுப்பெறச் செய்துள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.
இச்சாதனைகள் புள்ளிவிவரங்களாக மட்டுமில்லாமல், குடும்ப நல்வாழ்வு, புதிய பொருளாதார வாய்ப்புகள், உறுதியான எதிர்காலம் என மக்களுக்கு அதிக நன்மைகளை உருவாக்கியுள்ளதாக அவர் மேலும் விவரித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]