பொது

அடுத்தாண்டும் தொடரும் 'மைஸ்டெப்' திட்டம்

28/12/2025 01:33 PM

புத்ராஜெயா, 28 டிசம்பர் (பெர்னாமா) -- மைஸ்டெப் (MySTEP) எனப்படும் மலேசிய குறுகிய கால வேலை வாய்ப்புத் திட்டத்தை அடுத்தாண்டும் தொடர அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.  

கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி, பொது சேவை துறை, ஜே.பி.ஏ-வின்  மேம்பாட்டு பிரிவுத் துணை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹமட் பக்காரி இஸ்மாயில் கையெழுத்திட்ட சுற்றறிக்கையில் இம்முடிவு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக இன்று தனது முகநூலில் அத்துறை பதிவிட்டுள்ளது. 

பட்டதாரிகள் அல்லது வேலை தேடுபவர்களை இலக்காகக் கொண்டு, மாற்றுத்திறனாளிகள், மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு பொது சேவை துறையில் குறுகிய கால வேலை வாய்ப்புகளையும் அனுபவத்தையும் வழங்கும் பொருட்டு இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி நடைமுறைக்கு வரவிருக்கும் மைஸ்டெப் பணியாளர் சேவையை பெறும் வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் மைஸ்டெப் பணியாளர் சேவையை பெறும் செயல்முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜே.பி.ஏ தெரிவித்தது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]