உலகம்

தென் மெக்சிக்கோ: ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி

29/12/2025 04:38 PM

மெக்சிக்கோ, 29 டிசம்பர் (பெர்னாமா) -- மெக்சிக்கோவில் நிசாண்டா எனும் நகர் அருகே, 250 பேர் பயணித்த ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இவ்விபத்தில் 98 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த ரயிலில் ஒன்பது பணியாளர்கள் உட்பட 250 பேர் பயணித்த வேளையில், 139 பேருக்கு எவ்வித காயங்கள் ஏற்படவில்லை என்றும், 36 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மெக்சிக்கோ கடற்படை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் Claudia Sheinbaum தமது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மெக்சிகோ சட்டத்துறை அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)