பொது

R&R-இல் 3 வாகனங்களை டிரெய்லர் மோதிய விவகாரம்; விசாரணைத் தொடங்கியது

29/12/2025 04:44 PM

மலாக்கா, டிசம்பர் 29 (பெர்னாமா) -- மலாக்கா, அயர் கெரோ மேம்பாலத்தின் R&R ஓய்வு தளத்தில் டிரெய்லர் லாரி ஒன்று மூன்று வாகனங்களை மோதியதாக நேற்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

புக்கிட் அமான் நெடுஞ்சாலை விசாரணை பிரிவு யு.எஸ்.எல்.ஆர் இவ்விசாரணையை மேற்கொண்டு வருவதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடென்டன் அஹ்மாட் அபு பாகார் தெரிவித்தார்.

ஒரு டிரெய்லர் லாரி மற்றும் மூன்று வாகனங்களை உட்படுத்தி அவ்விபத்து நிகழ்ந்திருப்பதை பெர்னாமா தொடர்பு கொண்டபோது அஹ்மாட் அபு பாகார் உறுதிப்படுத்தினார்.

மேலும் விபத்து தொடர்பிலான மேல் விசாரணைகளை புக்கிட் அமான் நெடுஞ்சாலை விசாரணைப் பிரிவு தற்போது முடுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட R&R ஓய்வு தளத்திற்குள் நுழைந்த ஒரு லாரி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மூன்று வாகனங்களை மீது மோதிய சுமார் ஒரு நிமிட அளவிலான காணொளி ஒன்று, முன்னதாக, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)