ஸ்பெயின், டிசம்பர் 30 (பெர்னாமா) -- வார இறுதியில் ஸ்பெயினின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் பெய்த தொடர்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று, திங்கட்கிழமை ஸ்பெயினின் அமலாக்கத் தரப்புனர் அண்டலூசியா வட்டாரத்தில் உள்ள இலொர மற்றும் அல்ஹௌரின் எல் கிராண்டே ஆகிய இடங்களில் காணாமல் போன இருவரின் உடல்களைக் கண்டெடுத்தனர்.
நதிகள் கரைபுரண்டோடியதில் கார்களும் மற்றும் மோட்டார்சைக்கிள்களும் அடித்து செல்லப்பட்டன. எனவே, பாதுகாப்பு கருதி வீடுகளுக்குள் இருக்குமாறு பொது மக்களுக்கு அதிகாரிகள் எச்சரித்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வாலென்சியா நகரில் வீட்டினுள்ளேயே அல்லது உயரமான பகுதிகளில் தங்குமாறு அங்கு வசிப்பவர்களின் கைப்பேசிகளுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், ஸ்பெயினின் பைரனீஸ் மலைப்பகுதியில் உள்ள பான்டிகோசா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் மூவர் உயிரிழந்ததோடு ஒருவர் காயமடைந்ததாக அந்நாட்டு அமலாக்கத் தரப்பினர் தெரிவித்தனர்.
பனிச்சருக்கு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அறுவர் கொண்ட குழுவில் மேலும் இருவர் தப்பித்து வெளியேறி உதவி கோரியுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)