பொது

2026-இல் மின்சார ரயில் சேவை; 12 லட்சம் பேர் பயன்படுத்துவர் - கே.டி.எம்.பி

31/12/2025 03:29 PM

ஜோகூர் பாரு, 31 டிசம்பர் (பெர்னாமா) -- தெற்கு- வடக்கு வழித்தடங்களில் முழுமையாக செயல்படத் தொடங்கிய பிறகு, 2026 ஆம் ஆண்டில், ஈ.டி.எஸ்3 எனும் மின்சார இரயில் சேவையை, சுமார் 12 லட்சம் பயணிகள் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோலாலம்பூர் - ஜோகூர் பாரு வழித்தடத்தில் நாளொன்றுக்கு 2,600 பேர் உட்பட சராசரி 3,400 பயணிகளை 'Keretapi Tanah Melayu' நிறுவனம், கே.டி.எம்.பி இலக்கு கொண்டுள்ளதாக அதன் நடவடிக்கைப் பிரிவு தலைமை அதிகாரி அஃப்சர் சாகாரியா தெரிவித்தார்.

தினமும் சராசரி 400 பயணிகள் ஜோகூர் பாரு-பட்டர்வெர்த் மற்றும் ஜோகூர் பாரு-பாடாங் பெசார் வழிகளைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

''அடுத்த ஆண்டு, ஜோகூரிலிருந்து மற்றும் ஜோகூருக்கு 12 ஈ.டி.எஸ் சேவைகளை வழங்குவோம், அதாவது கே.எல் சென்ட்ரலில் இருந்து ஜே.பி சென்ட்ரலுக்கு இடையே 8 ஈ.டி.எஸ் சேவைகள், ஜே.பி.-இலிருந்து பட்டவெர்த்திற்கும் ஜே.பி சென்ட்ரலுக்கு திரும்பவும் இரண்டு சேவைகள், ஜே.பி சென்ட்ரல் நிலையத்திலிருந்து பாடாங் பெசாருக்கு இரண்டு சேவைகள்,'' என்றார் அவர்.

நாட்டின் வளர்ச்சியில் ரயில் அடிப்படையிலான போக்குவரத்து முக்கிய பங்கு வகித்ததாக கூறிய அஃப்சர், குறிப்பாக கெமாஸ்-ஜோகூர் பாரு மின்சார இரட்டை தண்டவாளத் திட்டமும் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்.டி.எஸ் இணைப்பு பாதையும் மாற்றத்திற்கான முக்கிய அம்சமாக விளங்கவிருப்பதை சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)