பினாங்கு, 31 டிசம்பர் (பெர்னாமா) -- நிபோங் திபால், சுங்கை பாக்காபில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று மாலை, முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு வன்முறை தாக்குதல் மேற்கொண்டது.
அதில், ஆடவர் ஒருவர் மரணமடைந்த வேளையில், இருவர் காயங்களுக்கு ஆளான சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவும் பொருட்டு, போலீசார் இரு ஆடவர்களை கைது செய்துள்ளனர்.
சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களில் அவ்விருவரும் கைதாகினர்.
தலைப்பகுதியில் சரமாரியான வெட்டுக் காயங்களுக்கு ஆளான 59 வயதுடைய ஆடவர் மரணமடைந்த வேளையில், பலத்த காயங்களுக்கு ஆளான இரு ஆடவர்கள் தற்போது சுங்கை பாக்காப் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடன் பிரச்சனை இந்த கைகலப்பிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி இஸ்மாயில் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)