2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மலேசியப் பொருளாதாரம் தொடர்ந்து மீள்தன்மையுடன் இருந்தது

31/12/2025 03:43 PM

கோலாலம்பூர், 31 டிசம்பர் (பெர்னாமா) -- நிலையான தொழில்துறை உற்பத்தி மற்றும் உற்பத்தி விற்பனையின் ஆதரவுடன் தயாரிப்பு, சேவைகள் மற்றும் கட்டுமானத்தில் நீடித்த வளர்ச்சியால், 2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மலேசியப் பொருளாதாரம் தொடர்ந்து மீள்தன்மையுடன் இருந்தது.

வலுவான மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், ஏற்றுமதிகள் அதிகரிப்புக் காரணமாக இந்த வளர்ச்சி நேர்மறையான வர்த்தக அதிகரிப்பு நிலைத்தன்மைக்கு உதவுவதாக மலேசிய புள்ளிவிவரத் துறை, DoSM குறிப்பிட்டுள்ளது.

அண்மைய பொருளாதார அடைவுநிலையை எடுத்துரைத்த புள்ளிவிவரத்துறை தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முஹமட் உசிர் மஹிடின், நிலையான உள்நாட்டு தேவையால் ஆதரிக்கப்படும் சேவை துறை முக்கிய உந்துதலாக உள்ளது என்றும், உற்பத்தி மிதமாக விரிவடைந்து கட்டுமானம் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.

விவசாயம், சுரங்கம் மற்றும் குவாரி துறைகள் கலவையான அடைவுநிலையைக் காட்டின.

இது வானிலை மற்றும் பொருட்களின் விலை மாற்றங்களின் தாக்கத்தை பிரதிபலித்ததுள்ளதோடு, 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 4.7 விழுக்காட்டு ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)