உலகம்

காசாவிற்கான மனிதாபிமான உதவி நடவடிக்கைகளைப் பார்வையிட்ட ஏஞ்சலினா ஜோலி

03/01/2026 03:37 PM

ரஃபா எல்லை, ஜனவரி 03 (பெர்னாமா) -- எகிப்து, ரஃபா எல்லையில் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை ஹாலிவூட்டின் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி பார்வையிட்டார்.

ரஃபா எல்லை வழியாகச் காசாவுக்கு உதவிப் பொருள்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன.

அமெரிக்க அதிகாரிகளுடன் வந்திருந்த ரஃபாயை மனிதாபிமான உதவி நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் வரவேற்றனர்.

ரஃபா எல்லையில் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகள் குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

உதவிப் பொருள்களுடன் ஆயிரக்கணக்கான லாரிகள் காசாவிற்குள் செல்ல காத்திருப்பதாகச் செம்பிறை சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எகிப்தில் உள்ள காயமடைந்த பாலஸ்தீனியர்களின் நிலைமையை ஆய்வு செய்யவும் மோதலால் பேரழிவிற்குள்ளான காசாவிற்கு உதவி வழங்கும் செயல்முறையைக் கண்டறியவும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பின் முன்னாள் சிறப்புத் தூதரான ஜோலியின் இந்த வருகை அமைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)