BREAKING NEWS   Warga ATM terlibat aktiviti tidak bermoral, rosakkan imej ATM akan disingkir daripada perkhidmatan - Mohamed Khaled | 
 உலகம்

தனது மூன்று கோடி முதல் ஐந்து கோடி பீப்பாய் எண்ணெயை வெனிசுலா அமெரிக்காவிடம் ஒப்படைக்கும்

07/01/2026 04:05 PM

வாஷிங்டன் டீ.சி , ஜனவரி 07 (பெர்னாமா) -- வெனிசுலா மூன்று கோடி முதல் ஐந்து கோடி பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

வெனிசுலாவில் இருந்து பெறப்படும் எண்ணெய், அதன் சந்தை விலையில் விற்கப்படும் என்று தமது சமூக ஊடக தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

எண்ணெய் விற்பனையில் பெறப்படும் பணத்தை தாம் கட்டுப்படுத்தவிருப்பதாக டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அதன் வழி, அப்பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களுக்கு பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துமாறு எரிசக்திச் செயலாளரை தாம் பணித்துள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தை நடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)