சியாவ், சுலாவேசி , ஜனவரி 07 (பெர்னாமா) -- இந்தோனேசியாவின் வட சுலாவேசியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், பலரைக் காணவில்லை என்பதால், அவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை பெய்த கனமழையால் சியாவ் தீவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த இயற்கை பேரிடரில் குறைந்தது 22 பேர் காயமடைந்ததாகவும், 682 பேர் இடம்பெயர்ந்ததாகவும் இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை தொடங்கி 14 நாட்களுக்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரண நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிற்பகுதியிலிருந்து இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 1,178 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 148 பேரை காணவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)