பொது

யூ.பி.எஸ்.ஆர் & பி.டி 3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்படும் - யுனேஸ்வரன்

11/01/2026 07:28 PM

கோலாலம்பூர், ஜனவரி 11 (பெர்னாமா) -- மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் அறிவை மதிப்பீடு செய்வதற்கு பள்ளிகளில் தேர்வுகள் தேவைப்படுகின்றது.

அதனைக் கருத்தில் கொண்டு, ஆரம்பப் பள்ளிகளுக்கான யூ.பி.எஸ்.ஆர்  மற்றும் படிவம் மூன்று பயிலும் மாணவர்களுக்கான  பி.டி 3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கவிருப்பதாக தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

 பி.டி 3 மற்றும் யூ.பி.எஸ்.ஆர் தேர்விவுகள் மீண்டும் வருமா என்ற கேள்விகளுக்கு, கல்வி அமைச்சு இவ்வாண்டு இந்த தேர்வுகளை மீண்டும் பரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது. நான் ஒரு துணை அமைச்சராக இருக்கும் வேளையில் வருகின்ற செவ்வாய் கிழமை அமைச்சரவையில் இதனை ஒரு கோரிக்கையாக வைப்பேன். இங்கு வந்திருக்கும் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது''

யூ.பி.எஸ்.ஆர்,  பி.டி 3 தேர்வுகளை மீண்டும் அமலுக்கு வர வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்க்க உள்ளது.

அதனைக் கருத்தில் கொண்டே அமைச்சரவையில் இது தொடர்பான கருத்துகள் எழுந்திருப்பதாக அவர் கூறினார்.

''இது வேறும் கோரிக்கை மட்டுமல்ல, ஏனென்றால் தற்போது மாணவர்களில் அடைவுநிலைகள் குறைவதை நம்மால் பார்க்க முடிகின்ற, ஆகையால் மீண்டும் இந்த தேர்வுகளை அமல்படுத்துவது மிகவும் முக்கம் மேலும் இது ஒரு பெரிய எதிர்பார்ப்பு, இதற்கு மடானி அரசாங்கம் துணைப்புரியும் என்றும் நம்புகிரேன்'' 

யூ.பி.எஸ்.ஆர்,  பி.டி 3 தேர்வுகளை அமல்படுத்தப்படுவதற்கான தேவையை மதிப்பாய்வு செய்ய தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தை கல்வி அமைச்சு மீண்டும் செயல்படுத்தியிருப்பது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

இதனிடையே, கல்வி மற்றும் கலாச்சாரம் மூலமாக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுச் செல்லவிருப்பதாக யுனேஸ்வரன் கூறினார்.

''நான் அமைச்சரனைக்கு வைக்கும் பரிந்துரைகள் என்னவென்றால் ஒற்றுமை மூலமாக நாட்டு மக்கள் கல்வி மூலமாகவோ கலச்சார மூலமாகவோ குறித்த பாடங்களில் மாணவர்கள் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும். கல்வி மக்களை ஒரு போது ஒற்றுமையாக வைத்திருக்கும். ஆனால் தற்போதைய கால கட்டத்தில் கல்விவே சிலருக்கு எதிர்மறையான விளைவுகளை அளிக்கின்றது.  ''

இன்று, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் ஶ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டிலான 2026ஆம் ஆண்டின் ஸ்கந்த வேள்வி நிகழ்ச்சிக்குச் சிறப்பு வருகைப் புரிந்த போது செய்தியாளர்கள் சந்திப்பில் யுனேஸ்வரன் ராமராஜ் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)