பாகிஸ்தான், ஜனவரி 12 (பெர்னாமா) -- இஸ்லாமாபாத்-இல் ஞாயிற்றுக்கிழமை வீடொன்றின் எரிவாயு கலன் வெடித்தில் புதுமண தம்பதியர் உட்பட எட்டு பேர் பலியாகினர்.
மேலும், 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக போலீஸ் மற்றும் மீட்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி காலை மணி 7.20 அளவில் திருமணத்திற்கு வருகைப் புரிந்திருந்த விருந்தினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இச்சம்பம் நிகழ்ந்துள்ளது.
வெடிப்பின் போது கூரை இடிந்து விழுந்து சுவர்களின் சில பகுதிகள் வெடித்துச் சிதறின.
சிதறிக் கிடந்த இடிபாடுகள் மற்றும் குப்பைகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டவர்கள் உயிரிழந்தனர்.
சம்பவத்திற்கு முதல் நாள் திருமணம் புரிந்த தம்பதியர் இச்சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்ததை அவசர சேவைகள் உறுதிப்படுத்தின.
அவர்களுடன் ஆறு விருந்தினர்களும் குடும்ப உறுப்பினர்களும் பலியாகினர்.
காயமடைந்த 12 பேர் உள்ளூர் மருத்துமனைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)