பொது

பயண விசாக்களைத் தவறாக பயன்படுத்தும் வெளிநாட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

14/01/2026 05:42 PM

புத்ராஜெயா, ஜனவரி 14 (பெர்னாமா) -- வர்த்தகர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து பயண விசாக்களைத் தவறாக பயன்படுத்தி மலேசியாவில் பணிப்புரியும் வெளிநாட்டவர்கள் மீது அரசாங்க கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளும்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

"இவ்விவகாரத்தில், அவர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலைக்காக விசாக்களைத் தவறாக பயன்படுத்துபவர்கள். மேலும், அமலாக்க நிறுவனங்களின் மூலம் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, உள்துறை அமைச்சு கண்காணிப்பை மேற்கொள்ளும்" என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் 

மலேசிய குடிநுழைவுத் துறை ஜி.ஐ.எம் உட்பட தொடர்புடைய அமலாக்க நிறுவனங்களின் மூலம் உள்துறை அமைச்சு கே.டி.என் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)