விளையாட்டு

10 ஆண்டுகளுக்குப் பிறகு எப்.ஏ கிண்ண காலிறுதியில் வெஸ்ட் ஹம்

10/03/2026 05:30 PM

லண்டன், 10 மார்ச் (பெர்னாமா) -- இங்கிலாந்து எஃப்.ஏ கிண்ண காற்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு வெஸ்ட் ஹம் தேர்வானது.

இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் பினால்டி வழி, 5-3 என்ற கோல் எண்ணிக்கையில் வெஸ்ட் ஹம், பிரெண்ட்ஃபோர்டை வீழ்த்தியது.

லண்டன் அரங்கில் நடைபெற்ற வெஸ்ட் ஹம் -  பிரெண்ட்ஃபோட் இடையிலான இந்த ஆட்டம் தொடக்கம் முதலே சவாலாக அமைந்திருந்தது.

முதல் பாதியின் 19-வது நிமிடத்தில் வெஸ்ட் ஹம் அணிக்கான முதல் கோலை ஜாரோட் போவன் போட்ட வேளையில் அதன் இரண்டாம் கோலையும் அவரே பினால்டி வழி அடித்தார்.

அதேபோல, பிரெண்ட்ஃபோட் அணிக்கான முதல் கோலைப் போட்ட இகோர் தியாகோ பின்னர் 81-வது நிமிடம் பினால்டி வழி இரண்டாம் கோல் அடித்த போது ஆட்டம் 2-2 என சமன் ஆனது.

வழங்கப்பட்ட கூடுதல் நிமிடத்திலும் அதே நிலை நீடித்ததால், இறுதியில் ஆட்டம் 5-3 என பினால்டி வாய்ப்பில் வெஸ்ட் ஹம் அணிக்குச் சாதகமானது.

இந்த வெற்றியின் மூலம் கிழக்கு லண்டனைச் சேர்ந்த அந்தக் கிளப் 10 ஆண்டுகளில் முதல் முறையாக எஃப்.ஏ கிண்ண காலிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)