பொது

மலேசியாவின் சுற்றுலா தளத்தை வலுப்படுத்துவதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்

14/01/2026 08:17 PM

கோலாலம்பூர், ஜனவரி 14 (பெர்னாமா) -- அரசாங்கத்தின் முயற்சிகளை வெற்றியடையச் செய்ய, தனியார் துறையின் ஆக்கப்பூர்வமான ஈடுபாடு முக்கியமானதாக கருதப்படுகிறது.

குறிப்பாக, 2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரத்தில் உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக நாட்டின் நிலையை வலுப்படுத்தவும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் என்று மலேசிய சுற்றுலாத் துறைத் தலைவர் டத்தோ மனோகரன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இன்று கோலாலம்பூரில் 2026மலேசியாவிற்கு வருகைபுரியும் ஆண்டை முன்னிட்டு SMS DEEN Jewellers நிறுவனத்தின் தங்க நாணயத்தை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர், டத்தோ மனோகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை, இந்தியாவைச் சேர்ந்த சுமார் 14 லட்சம் சுற்றுப் பயணிகள் மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளனர்.

கடந்த ஆண்டு போலவே, 2026 சுற்றுலா ஆண்டிலும் மலேசியாவுக்கு வருகைத் தரும் இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மலேசிய தங்கத்தின் தரம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை அதிகம் கவர்வதால், 2026 மலேசியாவிற்கு வருகைபுரியும் ஆண்டை ஒட்டி, இந்த தங்க நாணயத்தை அறிமுகம் செய்திருப்பதாக SMS DEEN Jewellers நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி Mohamad Shaifudeen தெரிவித்தார்.

அரசாங்க நிறுவனங்கள், தொழில்துறை நடத்துனர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் முழு ஈட்டுபாட்டுடன் நாட்டின் சுற்றுலாத் துறை வளர்ச்சியில் பங்காற்றுவதைநோக்கமாக கொண்டு 2026 மலேசியாவிற்கு வருகைபுரியும் ஆண்டு அமைந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)