பொது

ஏ.டி.எம் உறுப்பினர்களை உட்படுத்திய விவகாரத்தில் முழு விசாரணை 

18/01/2026 05:10 PM

அலோர் காஜா, 18 ஜனவரி (பெர்னாமா) -- YEYE எனும் அநாகரீக செயல்களில் ஈடுபட்ட மலேசிய ராணுவப் படை, ஏ.டி.எம் உறுப்பினர்களை உட்படுத்திய விவகாரத்தில் சமரசம் காணாமல் கடுமையான உள் நடைமுறைகளின்படி தற்காப்பு அமைச்சு முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

கடுமையான, தெளிவான விதிமுறைகள் மற்றும் கட்டொழுங்கைக் கொண்ட தரை, கடல் மற்றும் ஆகாயப் படைகளின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு குழு, இந்த விசாரணையை மேற்கொண்டதாக அதன் துணை அமைச்சர் அட்லி சஹாரி கூறினார்.

''மிண்டேஃபில் அல்லது நமது இராணுவ களங்களில். எனவே, தனிமைப்படுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும், என்ன நடக்கிறது என்பது எங்கள் கலாச்சாரம் அல்ல என்பதை நாங்கள் அறிவோம். மேலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,'' என்றார் அவர். 
 
மலாக்கா, அலோர் காஜாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு அலங்கார தொடக்க விழாவிற்குப் பிறகு அட்லி சஹாரி அவ்வாறு கூறினார்.

விசாரணையின் மூலம், ஒழுக்கக்கேடான செயல்களுடன் தொடர்புடைய உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகளுக்கு, எந்தவொரு தண்டனையும் விதிக்கப்படுவதற்கு முன்னர், தங்களைத் தற்காத்துக் கொள்ள அல்லது தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பதற்கான உரிமை உறுதி செய்யப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பரலாக பகிரப்பட்ட YEYE எனும் அநாகரீக செயல்களில் ஈடுபட்ட 15 அதிகாரிகளை, தமது தரப்பு கண்டறிந்துள்ளதை தரைப்படைத் தளபதி ஜெனரல் டத்தோ அசான் முஹமட் ஒத்மான் நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]