லண்டன், பிப்ரவரி 14 (பெர்னாமா) -- இங்கிலாந்து எப்.ஏ கிண்ணம்..
இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், வெற்றியாளர் கிளப்பான ஹல் சிட்டியை 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தி செல்சி ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறியது.
அதில் மூன்று கோல்கள் அடித்து ஹட்ரிக் சாதனை செய்தார் செல்சியில் தாக்குதல் ஆட்டக்காரர் போர்த்துகலின் பெட்ரோ நெட்டோ.
முதல் பாதி ஆட்டத்தின் அரை மணிநேரம் வரை கோல் ஏதும் அடிக்கப்பட்டாத நிலையில், 40-வது நிமிடத்தில் நெட்டோ முதல் கோலைப் போட்டார்.
எஞ்சிய கோல்கள் இரண்டாம் பாதியில் அடிக்கப்பட்ட வேளையில், பிரேசிலின் இளம் ஆட்டக்காரரான எஸ்டெவாவோவும் செல்சிக்கான ஒரு கோலைப் போட்டார்.
இதனிடையே, ஜெர்மனி பண்டஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டியில், போருசியா டார்ட்மண்ட் 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் மைன்சை வீழ்த்தியது.
தற்போது தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளை பதிவு செய்திருக்கும் போருசியா இந்த வெற்றியின் வழி பாயன் முனிக் உடனான 11 புள்ளிகளை குறைத்துள்ளது.
போருசியா டார்ட்மண்ட் இளம் ஆட்டக்காரான ஜூலியன் ரைர்சன் ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் தட்டிக்கொடுத்த பந்தை செர்ஹோ குய்ராசி மிக லாவகமாக கோலாக்கினார்.
அடுத்த 5 நிமிடங்களில் டார்ட்மண்ட்னின் இரண்டாவது கோல் போடப்பட்டது.
முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருணத்தில் தமது மூன்றாவது கோலை அடித்த டார்ட்மண்ட் அதன் நான்காவது கோலை ராமி பென்செபெய்னி வழி இரண்டாம் பாதி ஆட்டத்தில் போட்டது.
வெற்றி பெற்றிருந்தாலும், டார்ட்மண்ட் அடுத்த இரண்டு வாரங்களில் பாயர்ன் அணியுடன் எதிர்கொள்ள உள்ள முக்கியப் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்,
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)