பந்திங், 15 பிப்ரவரி (பெர்னாமா) -- சிலாங்கூர், பந்திங் தாமான் பைடுரியில் உள்ள இரண்டு மாடி வீட்டில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு வயது சிறுவன் உடல் கருகி உயிரிழந்தான்.
இச்சம்பவம் குறித்து அதிகாலை மணி 4.42-க்கு தகவல் கிடைத்ததாக, சிலாங்கூர் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தினால் 10 பேர் வசித்து வந்த அந்த வீடு 85 விழுக்காடு தீக்கிரையானது.
வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் இச்சம்பவத்தில், 30 வயதுடைய ஆடவர் ஒருவருக்கு சொற்ப காயம் ஏற்பட்டது.
காலை மணி 7-க்கு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)