பொது

இரு வாகனங்கள் மீது மரம் விழுந்தது

15/02/2026 02:59 PM

பினாங்கு, 15 பிப்ரவரி (பெர்னாமா) --   பினாங்கு மவுண்ட் எர்ஸ்கின் சாலையில், மரம் ஒன்று திடீரன சாய்ந்து இரண்டு வாகனங்கள் மீது விழுந்ததில் அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இச்சம்பவம் குறித்து பின்னிரவு மணி 12.35-க்கு தகவல் கிடைத்ததாக பினாங்கு மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் ஜோன் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

பெரோடுவா விவா மற்றும் பெரோடுவா பெசா ஆகிய இரண்டு வாகனங்கள் மீது மரம் விழுந்ததாகவும் அவ்விரு கார்களில் பயணித்த மூவர் பாதுகாப்பாக வெளியேறியதாகவும், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)